Asianet News TamilAsianet News Tamil

அறிவியல் வேறு-புராணம் வேறு! - சொல்வது தவறாக இருந்தால் திருத்துங்கள்,  சரியாக இருந்தால் திருந்துங்கள்- சுப.வீ!

நல்லது செய்வதற்க்கு நேரம், காலம் கிடையாது, எப்பொழுதெல்லாம் நல்லதை சிந்திக்கின்றோமோ, அப்போதெல்லாம் நல்ல நேரம்,எப்போதெல்லாம் கேட்டவை சிந்திக்கின்றோமோ அப்போதெல்லாம் கேட்ட நேரம் தான் என மதுரையில் சுப.வீரபாண்டியன் பேசியுள்ளார். 

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் "சனிப்பெயர்ச்சி" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்" புராணத்தின் அடிப்படையில் கோள் என்று சொல்வது சூரியனையும் சேர்த்து தான், ஆனால் அறிவியலின் படி சூரியன் ஒரு விண்மீன்,நிலா ஒரு துணை கோள், தணிக்கோள் இல்லை, ராகுவும் கேதுவும் அறிவியலின் படி கோள்களே இல்லை என்று சொல்லுவதை தான் புராணத்தின் அடிப்படையில் அவை சாயகிரகம் என்கிறார்கள், சாயாகிரகம் என்றால் வெறும் நிழல் தான், மக்கள் இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

நான் சொல்வது தவறாக இருந்தால் திருத்துங்கள்,  சரியாக இருந்தால் திருந்துங்கள், புராணத்தில் வியாழனுக்கும் சனிக்கும் எப்படி ராஜகிரகம்  என்கிறார்களோ, அதுபோல ராகு கேதுவுக்கு சர்ப கிரகம் என்கிறார்கள், நம்மைவிட்டு போன பிறகு அனா, பைசாவை விட்டுவிட்டோம்,ஏன் நம்மைவிட்டு போனதற்கு பிறகும் பழைய நம்பிக்கைகளை விடவில்லை, ஜோதிடத்தில் நம்பிக்கை உடையவர்கள் பதில் சொல்ல வேண்டும், ஒவ்வொரு நாளும் ராகு காலம் உள்ளது, ஏன் கேது காலம் இல்லை, எமகண்டம் தான் கேது காலம், ராகு காலம் மற்றும் கேது காலத்தில் நல்லதை செய்துவிடக்கூடாது என்பார்கள், ஆனால் நல்லது செய்வதற்க்கு நேரம், காலம் கிடையாது.

எப்பொழுதலாம் நல்லதை சிந்திக்கின்றோமோ, அப்போது தான் நல்ல நேரம், எப்போதெல்லாம் கேட்டவை சிந்திக்கின்றோமோ அப்போதெல்லாம் கேட்ட நேரம் தான், எமன் வருகின்ற நேரத்தை எமகண்டம் என்கிறார்கள், இறப்பவர்கள் அனைவரும் எமகண்டத்தில் தான் இருக்கிறார்களா? எமகண்டத்தில் இறப்பவர்களை எமன் கொண்டு செல்கிறான் என்றால்,  எமகண்டம் இல்லாத நேரத்தில் இறப்பவர்களை யார் கொண்டு செல்கிறார்கள்? ஒளியை கடவுள் படைத்தான் என்று இருளை சைத்தான் படைத்தானா?

திராவிடம் இந்த மண்ணில் இருக்கின்ற வரை அறவியலும், கருத்து சுதந்திரம், ஜனநாயகம் வாழும்,பேனாவை உடைப்பேன் என்று சொல்வது கருத்து சுதந்திரம் என்றால், அவரின் கையை உடைப்பேன் என்று சொல்வதும் கருத்து சுதந்திரம் தான் ஆட்சிக்கு வந்து பேனாவை உடைப்பென் என்றால் அது நடக்காது, ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் ஒரு ஐந்து, ஆறு எம்.எல்.ஏக்களாவது வெற்றி பெற வேண்டும். அதற்கும் முன்னாள் இரண்டு, மூன்று இடங்களிலாவது "டெபாசிட்" வாங்க வேண்டும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத உங்களுக்கு இவ்வளவு பேச்சு இருக்குமென்றால், ஆட்சியில் இருக்கும் எங்களுக்கு எவ்வளவு பேச்சு இருக்கும்?" என்றார்.

Video Top Stories