Asianet News TamilAsianet News Tamil

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முடியை தானமாக வழங்கிய 200 மாணவிகள்

மதுரையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிக்க உதவும் வகையில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கள் முடியை தானமாக வழங்கினர்.

மதுரை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில் கேன்சர் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி  மற்றும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதத்தில் முடி தானம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை திருப்பாலையில் உள்ள யாதவ  மகளிர் கல்லூரியில் இன்று நடைப்பெற்றது. ரோட்டரி பெண் உறுப்பினர்கள் மற்றும் மாணவிகள் முடி தானம் வழங்கும் நிகழ்வை ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.

ரோட்டரி சங்கத்தை சேர்ந்த ரேவதி குமரப்பன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் ரோட்டரி சங்க பெண் உறுப்பினர்கள் மற்றும் யாதவ பெண்கள் கல்லூரி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் முடி தானம் செய்தனர். தானமாக பெறப்பட்ட முடியினை கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விக் தயாரித்து வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

Video Top Stories