Watch : ஆணவக் கொலை தமிழகத்தில் அதிகம்! - பாஜக அண்ணாமலை தாக்கு!

தமிழகத்தில் தான் ஜாதிய பாகுபாடு அதிகம் உள்ளது., இந்தியாவிலேயே ஜாதிய கொலை கர்நாடகாவை விட அதிகமாக நடைபெறுவது தமிழகத்தில் தான். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

First Published Sep 21, 2022, 6:43 PM IST | Last Updated Sep 21, 2022, 6:43 PM IST

காரைக்குடி செல்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமானத்திற்கு வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், பாஜக தேசிய தலைவர் Jp நட்டா நாளை காலை 10 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்த பிறகு தனியார் ஹோட்டலில் முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு நாளை மாலை சிவகங்கை செல்ல உள்ளார். அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

நீலகிரி எம்பி ஆ ராசா பேசுவது நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது., சொந்த தொகுதியிலேயே 90% மக்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அனைத்து மதத்தினரும் ஆர்.ராசாவின் கருத்தை கண்டித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டுகளாக திமுகவினர் ஒவ்வொரு சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால்., தொடர்ந்து ஏன் பேச வேண்டும்., இதை கண்டிப்பதற்கு யாரும் இல்லை என்றார்.

புதிய புதிய கருத்துகளை பேசி சர்ச்சைக்குரிய வகையில் புதிய தமிழகம் என்று பேசி வருகின்றனர். அரசியல் நாகரீகத்தை ஆர்.ராசா குறைத்துக் காட்டி வருகிறார். ஆ.ராசாவை எதிர்த்துப் பேசியவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கைது நடவடிக்கை திமுக அரசு செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியவர்கள் மீது புதிதாக காவல் துறையினரை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக இல்லாத பொய்யான வழக்குகளை பாஜகவினர் மீது போட்டு கைது செய்து திமுக அரசு தமிழகத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத அரசியல் செய்வது திமுக தான் பாஜகவினர் அல்ல பாஜக என்றுமே அதை செய்வது கிடையாது. ஜாதியை வைத்து அரசியல் செய்த காலம் மழை ஏறிவிட்டது., அனைத்து சமுதாயத்தினரையும் மேலே கொண்டு வர செய்வது தான் அரசியல். ஒடுக்கப்பட்ட நபர்களை மேலே கொண்டு வர வேண்டும் என்றால் அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவினர் கொள்கை.

குழந்தைகளுக்கு தேன் மிட்டாய் வாங்குவதில் கூட ஜாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் தான் ஜாதிய பாகுபாடு அதிகம் உள்ளது. இந்தியாவிலேயே ஜாதிய கொலை கர்நாடகாவை விட அதிகமாக நடைபெறுவது தமிழகத்தில் தான் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.