பூ விற்ற பெண்ணிடம் வழிப்பறி செய்த திருடர்களை ‘சிங்கம்’ சூர்யா போல துரத்திய போலீஸ்

பூ விற்கும் பெண்ணிடம் பணம் வழிப்பறி செய்த திருடர்களை சிங்கம் பட காட்சி போல் சீரிப்பாய்ந்து பிடித்த காவல் ஆய்வாளர் காசிராஜனுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

First Published Oct 25, 2022, 10:44 PM IST | Last Updated Oct 25, 2022, 10:44 PM IST

மதுரை ரயில்நிலையம் எதிரேயுள்ள டவுண்ஹால் ரோடு பகுதியில் சாலையோரமாக பெண் ஒருவர் பூ கட்டி விற்பனை செய்துகொண்டிருந்துள்ளார்.  இந்நிலையில் இன்று மதியம் 1.15 மணியளவில் மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த அப்துல்ஷேக் மற்றும் அருண் ஆகிய இருவரும் பூ விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த பணப்பையை பிடுங்கி கொண்டு சிட்டாக தப்பிச்சென்றனர்.

இதனை பார்த்து அந்த பெண் கூச்சலிட அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த திடீர்நகர் காவல்நிலைய ஆய்வாளர் காசிராஜன் மற்றும் தலைமை காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் சிங்கம் பட சூர்யாபோல   இருவரையும் விரட்டி சென்று பிடித்தனர். இதனையடுத்து அவர்களிடமிருந்த பணப்பையை மீட்டு பூ விற்கும் பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் காவல் ஆய்வாளர் காசிராஜன் மற்றும் தலைமை காவலர் முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் பாராட்டினர். இந்நிலையில் பணத்தை பறித்தசென்ற இருவரையும் திடீர்நகர் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா