ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு; வாகன ஓட்டிகள் கடும் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

First Published Jan 9, 2023, 4:08 PM IST | Last Updated Jan 9, 2023, 4:08 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது, இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன. பனிப்பொழிவால் அருகில் செல்லும் வாகனங்கள் கூட தென் படாதவாறு அதிக அளவில் பனி பொழிவு இருந்தது. இதனால் கடுமையான குளிர் நிலவி வாகனங்கள் மெதுவாகச் செல்கின்றன.

காலை முதல் பனிப்பொழிவு  அதிகரித்ததால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்,  தொழிலாளர்கள்  பொது மக்கள் பனியின் தாக்கத்தின் காரணமாக கடும் சிரமத்திற்கு உள்ளாகி ஸ்வெட்டர், தலைபாகை உள்ளிட்டவை அணிந்து குளிரை சமாளித்து சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

Video Top Stories