Watch : ஊத்தங்கரை அருகே இரு வாகனங்கள் நேருக்குநேர் மோதல்! - ஒருவர் பலி 13பேர் படுகாயம்!

ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை அருகே பூ லோடு ஏற்றி சென்ற பிக்கப் வாகனமும், எதிரே வந்த டாட்டா ஏசி வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது, அதில், ஒருவர் பலி, மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 

First Published Apr 10, 2023, 8:10 AM IST | Last Updated Apr 10, 2023, 12:53 PM IST

திருவண்ணாமலையில் இருந்து பூ லோடு ஏற்றி வந்த பிக்கப் வாகனம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை அருகே வந்த போது, கர்நாடக மாநிலம் மாண்டியாவிலிருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு வந்து கொண்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 13 பேர் படுகாயடைந்தனர்.

இ்ந்த விபத்தில், மாண்டியா தமிழ் நகர் சேர்ந்த வெங்கடேசன் 45 என்பவர் பலியானார். மேலும் படுகாயம் அடைந்த நான்கு பேரை ஊத்தங்கரை மருத்துவமனையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு மேல் சிகிச்சைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இன்று காலையில் ஏற்பட்ட இந்த கோர விபத்தால் இப்பகுதியே பரபரப்பாக உள்ளது.

Video Top Stories