Asianet News TamilAsianet News Tamil

அடிப்படை வசதிகளே இல்லை; கிராம சபை கூட்டத்தில் கதறி அழுத ஆசிரியை

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாலமரத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 2ம் தேதி நடத்தப்பட்ட கிராமசபை கூட்டத்தில் அரசு இடைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் தங்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று அழுதுகொண்டே புகார் அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாலமரத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 2ம் தேதி நடத்தப்பட்ட கிராமசபை கூட்டத்தில் அரசு இடைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் தங்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை .

இவரை தொடர்ந்து கிராம சபா கூட்டத்தில் ஓலைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சக்தி என்பவரும் கலந்து கொண்டு குறைகளை கூறினார்.அப்போது தங்கள் பள்ளியில் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை  95 மாணவ மாணவிகள் பயின்று வருவதாகவும், தங்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை எனவும், கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்களுக்கு போதிய கட்டிட வசதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார் தலைமை ஆசிரியை பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

Video Top Stories