குமரி அருகே

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராஜக்கமங்கலம் காவல்துறையில் பணிபுரியும் இரு காவலர்களை குறிப்பட்ட இரு குடும்பத்தினர் தாக்கி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

First Published Feb 14, 2023, 11:23 AM IST | Last Updated Feb 14, 2023, 11:23 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அடுத்த ராஜாக்கமங்கலம் காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் ஜார்ஜ் பிரேம்லால் இவருக்கு நேற்று அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் இரு வீட்டிற்கு இடையே பிரச்சனை இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து ஜார்ஜ் பிரேம்லால் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் தனிப்பிரிவு போலீசார் சுதாகர் என்பவரை அழைத்துக் கொண்டு சம்பவம்  நடந்த இடத்திற்கு சென்றுள்ளார் அங்கு சென்று விசாரணை மேற்கொள்ளும் பொழுது சாரதி என்னும் இளைஞர் அருவாளை எடுத்துக்கொண்டு ஜார்ஜ் பிரேம் லால் மற்றும் சுதாகரை தாங்கள் ஒரு தலை பட்சமாக பேசுவதாகவும் ஆதலால்  உங்களை கொல்லாமல் விடமாட்டேன் எனவும் கூறி கொலை மிரட்டல் விடுத்ததோடு அவருடன் இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கி உள்ளது படுகாயம் அடைந்த போலீசாரை பொதுமக்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து ரஜாக்கமங்கலம் காவல்துறையில் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது.

Video Top Stories