Watch : இல்லாத தடத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி டார்ச்சர்! - விரக்தியில் அரசு பேருந்து ஓட்டுனர் குமுறல்!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் அட்டவணையில் இல்லாத தடத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி டார்ச்சர் கொடுப்பதாக ஓட்டுநர் ஞான பெர்க்மான்ஸ் பேருந்தை இயக்க மாட்டேன் என போராட்டம் நடத்தி வருகிறார்.
 

First Published Apr 10, 2023, 12:11 PM IST | Last Updated Apr 10, 2023, 12:50 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லைக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் எண்டு டூ எண்டு பேருந்து மற்றும் சிறு வழித்தட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது,

இந்நிலையில் வடசேரியில் இருந்து நெல்லை செல்லும் அரசு பேருந்துகளுக்கு ரூட் அட்டவணையில் இல்லாத ஒரு சில இடங்களில் நின்று செல்ல அப்பகுதி மக்களும் வலியுறுத்தி வருவதாகவும், இதனால் அங்கிருந்து ஏறும் நபர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தகராறில் ஈடுபடுவதும் வாடிகையாகியுள்ளது.

ஆனால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பேருந்து ரூட் அட்டவணையில் அந்த இடங்களில் நின்று செல்ல குறிப்பிடப்படவில்லை ஆனால் தற்போது உள்ள மேலாளர் ஜெரோலின் என்பவர் குறிப்பிடபடாத வழித்தடங்களில் நின்று செல்ல வேண்டும் எனவும், மேலும் மோசமான பேருந்துகளை இயக்கவும், ஓட்டுநர்களை வலியுறுத்தி வருவதாகவும், பொது இடங்களில் மரியாதை குறைவாகவும் ஓட்டுநர்களை திட்டுவதும் மேலும் பணிச்சுமையை அதிகரிக்கும் செயலிலும் திட்டமிட்டு செயல்படுகிறார் என ஒரு ஓட்டுனர் தீடிர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்" தன்னை மேலாளர் பலி வாங்கும் போக்கில் செயல்படுகிறார், மன அழுத்தத்தை உருவாக்கி டார்ச்சர் கொடுப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளார் என்றார்.