குமரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் கலைகட்டிய ஓணம் கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் தனியார் மருத்துவ கல்லூரியில் ஓணம் விழா திருவாதிரை நடனம், அத்தப்பூ கோலம் போட்டு மாணவ, மாணவிகளுடன் பேராசிரியர்களும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டம்.
மலையாள மொழி பேசும் மக்களின் வசந்த விழாவான திருவோண பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் விழா கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கி உள்ளன. பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குலசேகரத்தில் அமைந்துள்ள தனியார் ஹோமியோ மருத்துவக் கல்லூரியில் இன்று ஓணம் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மாணவிகள் திருவாதிரை நடனம், மாவேலிமன்னன் வாமனன் வேடமணிந்து வந்ததுடன் செண்டை மேளம் உட்பட பல்வேறு வகையான இசை நிகழ்ச்சிகளுடன் வகுப்பு வாரியாக மாணவ, மாணவிகள் பிரம்மாண்டமான அத்தப்பூ கோலங்கள் போட்டு அசத்தினர். மேலும் வடமிழுக்குப் போட்டி, நடனம், உறியடி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
இந்த ஓணம் விழாவில் மாணவ, மாணவிகளுடன் பேராசிரியர்களும் இணைந்து நடனமாடி ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.