மது பாட்டிலில் பூரான்! அமைச்சர் பதில் அளிக்காவிட்டால் நீதிமன்றம் நாட இருப்பதாக மது பிரியர் எச்சரிக்கை!

குமரி டாஸ்மார்க் கடையில் வாங்கிய மதுபானத்தில் பூரான் இருந்ததையொட்டி, இதுதொடர்பாக அமைச்சர் பதில் அளிக்காவிட்டால் நூகர்வோர் நீதிமன்றம் நாட இருப்பதாக மது பிரியர் தெரிவித்துள்ளனர்.
 

First Published Jun 12, 2023, 12:49 PM IST | Last Updated Jun 12, 2023, 12:49 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த மேல்புறம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையில் வாங்கிய மதுபானத்தில் பூரான் என்ற விஷப்பூச்சி கிடந்துள்ளது. டாஸ்மார்க் கடையில் பாட்டிலை காட்டி குடிமகன் கேள்வி எழுப்பியபோது, பூரன் என்பது சைனாவில் முக்கியமான உணவு பொருள்தான் தவறாக நினைத்து விட வேண்டாம் எனக் கூறி பாட்டிலை பறித்து விட்டு வேறு மதுபான பாடலை கொடுத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னதாக, அந்த மதுபாட்டிலை வீடியோ எடுத்த அந்த மதுப்பிரியர், இதுதொடர்பாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆயத்தீர்வை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும், இல்லா விட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடபோவதாக அந்த பூரான் கிடந்ததாக கூறப்படும் மது பாட்டிலுடன் மது பிரியர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories