இனியும் இயக்க முடியாது; பழுதடைந்த அரசுப்பேருந்த RTO அலுவலகத்தில் ஒப்படைத்த ஓட்டுநர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்த அரசுப்பேருந்தை சரி செய்யாமல் தொடர்ந்து அதே பேருந்தை இயக்க அதிகாரிகள் வற்புறுத்துவதாக கூறி பேருந்தை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விட்டுச்சென்ற ஓட்டுநரால் பரபரப்பு.

First Published Jul 20, 2023, 10:49 PM IST | Last Updated Jul 20, 2023, 10:49 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கென்னடி. அரசுப்போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் இயக்கும் அரசுப் பேருந்து சரியாக பிரேக் பிடிக்காமல், முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஓட்டுநர் கென்னடி அதிகாரிகளிடம் பேருந்தின் நிலை குறித்து எடுத்துக் கூறி பிரச்சினைகளை சரிசெய்து தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால், அதனை கண்டுகொள்ளாத போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என திமிராக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலடைந்த ஓட்டுநர் இறுதியாக நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு பேருந்தை எடுத்துச் சென்று பேருந்து இயக்க முடியாத நிலையில் உள்ளது.

ஆனால், அதிகாரிகள் இதனை இயக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். நீங்களே பேருந்தை இயக்கிப் பார்த் முறையான பராமரிப்பில் உள்ளதா? பேருந்தை இயக்கலாமா என்று கூறுங்கள் என அலுவலகத்திலேயே பேருந்தை விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories