நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்; படுத்த படுக்கையில் வீடியோ வெளியிட்ட நிர்வாகி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரை, அங்கிருந்து மருத்துவர் துரத்துவதாக தமிழக முதல்வருக்கு புகார் அளிக்கும் வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது. 
 

First Published Jun 12, 2023, 3:08 PM IST | Last Updated Jun 12, 2023, 3:08 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஊட்டு வாழ்மடம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஹரிஹர செல்வம், மற்றும் சதீஷ்குமாரை, அக்கட்சியை சேர்ந்த 18 பேர் கடுமையாக தாக்கிய நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில், தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தன்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதாக ஹரிஹர செல்வம் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Video Top Stories