Asianet News TamilAsianet News Tamil

குமரி ஆட்சியர் அலுவலகத்தில் 12வயது சிறுவன் தீக்குளிக்க முயற்சி! பெட்ரோல் கேனை பிடிங்கி போலீஸ் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் 12 வயது சிறுவனும், அவனது தாயும் வந்து தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள பெரிய காடு சர்ச் தெருவை சேர்ந்தவர் ராமன், இவரது மனைவி கௌசல்யா வயது 40, இவர் தனது 12 வயது மகனுடன் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் பெட்ரோல் கேனுடன் வந்து தீ குளிக்க முயற்சித்தார், உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கௌசல்யாவின் கையில் இருந்த பெட்ரோல் கேனை பிடிங்கினர், பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ஈத்தாமொழி பெரிய காடு சர்ச் தெருவில் வசித்து வருவதாகவும், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த நபர்கள் தன்னையும் தன் பிள்ளைகளையும் தாக்கியதாகவும் இது குறித்து ஈத்தாமொழி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்தார்.

லவ் பேர்ட்ஸ் குஞ்சுகளை தனது மகனும் மகளும் திருடியதாக கூறி பக்கத்து வீட்டை சேர்ந்த அனர்த்தாஸ், யோபு, போஸ்கோ, கமலம், நிர்மலா ஆகியோர் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசி தன்னையும் தனது பிள்ளைகளையும் தாக்கினர் என்றும், மேலும் எனது வீட்டின் வெளியே நின்று இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியதோடு என்னை ஜாதி பெயர் சொல்லி இழிவு படுத்தி பேசியதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தான் ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் மீது எந்த வித நடவடிக்கை எடுக்காததால் தனக்கு நீதி கேட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தீக்குளிக்க முயற்சி செய்ததாக தெரிவித்தார். மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் தீக்குளிப்பேன் என்று தெரிவித்தார். உடனே போலீசார் நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்
 

Video Top Stories