Asianet News TamilAsianet News Tamil

நள்ளிரவில் காஞ்சிக்கு விசிட் அடித்த ரஜினி.. விடாமல் சூழ்ந்த ரசிகர்கள்!! வீடியோ

நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதாவுடன் சேர்ந்து வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். 

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை   அத்திவரதர்  சிலை மேலே எடுக்கப்பட்டு 48 நாட்கள் பொதுமக்களின்  தரிசனத்திற்காக வைக்கப்படுவது  வழக்கம். அதேபோல் 40 ஆண்டுகள் கழித்து கோவில்குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை கடந்த ஜூலை 1 தேதி முதல் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை லட்ச கணக்கான மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர், மீண்டும் ஆகஸ்ட்  17 ஆம் தேதி அத்திவரதர்சிலை கோவில் குளத்தில் வைக்கப்பட இருக்கிறது.எனவே நாளை மறுதினம் 16 ஆம் தேதி வரை அத்திவரதரை தரிசித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான விஐபிக்களும் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதாவுடன் சேர்ந்து வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு காஞ்சிபுரம் வந்த ரஜினிகாந்த், மனைவியுடன் அத்திவரதர் முன்பு அமர்ந்து நெக்குருக வழிபட்டார்.அத்தி வரதரை தரிசனம் செய்தார் அப்போது கோவில் நிர்வாகம் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.  தரிசனம் முடித்தவுடன் நேற்று இரவே அவர் சென்னை திரும்பினார் ரஜினி வருகையையொட்டி அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனிடையே வருகின்ற 16-ந் தேதி வரை மட்டும் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால், நாட்கள் நெருங்க நெருங்க லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். வருகின்ற 17-ந் தேதி அன்று வேத மந்திரங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ளே மீண்டும் அத்திவரதர் வைக்கப்படுகிறார்.

Video Top Stories