Watch : திண்டுக்கல்லில் கண்டெடுக்கப்பட்ட இளம் இயக்குனர்! அமெரிக்கா செல்லும் வாய்ப்பு பெற்ற 7ம் வகுப்பு மாணவி!

திண்டுக்கல் அருகே சிறந்த படத்தை இயக்கியதாக மாநில அளவில் சிறந்த இளம் இயக்குனர் பட்டத்தை வென்ற 7ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி அமெரிக்கா செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
 

First Published Apr 12, 2023, 4:40 PM IST | Last Updated Apr 12, 2023, 4:40 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் கலைத் திறமையை வெளிக்காட்ட ஒன்றியம், மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு என்று தமிழக அரசு கலை திருவிழாவை நடத்தியது. இதில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதேபோல் இதன் மற்றொரு பகுதியாக கல்வி சாரா மன்ற செயல்பாடுகளை அரசு பள்ளியில் உள்ள 6 ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மன்றம், சிறார் திரைப்படமன்றம், வானவில் மன்றம், வினாடி வினா மன்றம், என 4 மன்றங்களை அமைத்து அதில் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில்
சிறார் திரைப்படம் சார்ந்து தனிநபர் போட்டி, குழு போட்டியென ஏழு வகை போட்டிகள் நடைபெற்றன.

இதில், "திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குதல்" என்ற தனிநபர் பிரிவில் மல்லி படத்தில் ஒரு காட்சியை இயக்கியதில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அ.குரும்பபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ம.கீர்த்தனா வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். மாநில அளவில் சென்னையில் இறுதிப் போட்டி நடைபெற்றது


இப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆறு நாள் பயிற்சி முகாமில் தமிழகத்திலிருந்து மொத்தம் 150 மாணவ மாணவியர் கலந்து கொண்டார். இவர்கள் பத்து குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் 15 பேர் அடங்கிய குழுக்களாகவும் அதில் கதை மற்றும் ஆவணப்படம் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு, இதில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

இறுதிப்போட்டியில் கீர்த்தனா கலந்து கொண்ட 14 பேர் அடங்கிய குழு தென்னிந்திய வீடுகள் குறித்து ஆவணப்படம் எடுத்தனர். இப்படத்தை இயக்கிய பள்ளி மாணவி கீர்த்தனா சிறந்த இயக்குனராக வெற்றி பெற்றார். இதன்மூலம் தமிழக கல்வித்துறை அமைச்சர் அறிவித்த அமெரிக்க செல்லும் வாய்ப்பை கீர்த்தனா பெற்றுள்ளார்.

Video Top Stories