பஸ் பாஸ் கேட்ட கண்டக்டரை பளார் பளார்னு தாக்கிய போலீஸ்காரர்கள்.. அரசு பேருந்தில் நடந்த அராஜகம்.. பரபரப்பு வீடியோ..!

பஸ் பாஸ் கேட்ட கண்டக்டரை ரத்தம் வரும் அளவிற்கு கடுமையாக தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

First Published Sep 30, 2019, 10:57 AM IST | Last Updated Sep 30, 2019, 10:57 AM IST

திண்டுக்கல் அரசு பேருந்தில் பயணித்த காவலரிடம் பேருந்து நடத்துனர் பயணத்திற்கான வாரண்டு கேட்ட போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென மற்றொரு காவலர் ஒருவர் நடத்துனரை ரத்தம் வரும் அளவிற்கு கடுமையாக தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.