பழனி அருகே கோடை சீசனில் கள் விற்பனை அமோகம்; அதிரடி காட்டிய காவல் துறை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோடைகால சீசனை பயன்படுத்தி கள் இறக்கி வியாபாரம் செய்தவர்களை காவல் துறையினர் விரட்டி அடித்து கள்ளை கீழே ஊற்றி அழித்தனர்.

First Published Apr 3, 2023, 1:01 PM IST | Last Updated Apr 3, 2023, 1:01 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணை பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. இதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிலர் கோடைகால சீசனை பயன்படுத்தி கள்ளை இறக்கி வியாபாரம் செய்து வந்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் காவல்துறையினர் பாலாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கள் வியாபாரம் செய்து வந்ததும் சிலர் வாங்கி பருகி கொண்டிருந்த போது காவல் துறையினரைக் கண்டதும் ஓடினர். இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கள்ளை கீழே ஊற்றி அழித்தனர். மேலும் இதுபோன்று தொடர்ந்து நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்தனர்.

Video Top Stories