இன்று முதல் மீண்டும் பழனி பக்தர்களுக்கான சேவையில் ரோப்கார்; பராமரிப்பு பணிகள் நிறைவு

பழனி கோவிலுக்கு செல்லும் ரோப்கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து பஞ்சாமிர்தம் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று முதல் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்குகிறது.

First Published Oct 9, 2023, 6:00 AM IST | Last Updated Oct 9, 2023, 6:00 AM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் செல்லும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் மூலமாக மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம். 

இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டு புதிய கம்பி வடம், சாப்டுகள், உருளைகள், பெட்டிகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் போன்றவைகள் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் ரோப்கார் பெட்டிகளை பஞ்சாமிர்தங்கள் வைத்து சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ரோப்கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

Video Top Stories