பழனியில் பாரம்பரிய முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கும்மியாட்டம்
பழனி அருகே 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆடிய கும்மி ஆட்டம். பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள வயலூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் கடந்த சில வாரங்களாக நாட்டுப்புற கலையான கும்மி நடனத்தை கற்று வந்தனர்.
இந்த நிலையில் சக்தி கலை குழு சார்பில் வயலூர் கிராமத்தில் கும்மி நடனம் அரேங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நமது பாரம்பரிய கும்மி நடனத்தை உற்சாகமாக ஆடினர். இசைக்கு ஏற்றபடி கிராமிய பாடல் பாடி மேளஇசைக்கு ஏற்ப கும்மி நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.