கொடைக்கானல் - பழனி சாலை வனப்பகுதியில் காட்டுத்தீ! - வனத்துறையினர் போரட்டம்!

கொடைக்கானல் - பழனி சாலை பி எல் செட் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடி வருகின்றனர்
 

First Published Feb 28, 2023, 6:09 PM IST | Last Updated Feb 28, 2023, 6:09 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்து இரு மாதங்களுக்கு மேல் ஆகி உள்ளது. இதனால் வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வறட்சியான சூழல் நிலவுகிறது .இந்த வறண்ட சூழலில் காட்டுத்தீ கீழ் மலைப்பகுதியில் ஏற்பட்டது.

தொடர்ந்து தீ பற்றி எரிவதால் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காட்டுத்தீயானது சாலை ஓரங்களில் பரவி வருகிறது இதனால் அப்பகுதியில் செல்ல கூடிய வாகனங்கள் கவனமாக செல்ல வேண்டும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

Video Top Stories