சார் கையை விடுங்க சார் பப்ளிக் எல்லாம் வேடிக்கை பார்க்குராங்க குடிபோதை ஆசாமி போலீசார்களுடன் வாக்குவாதம்

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே குடிபோதை ஆசாமி காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

First Published Jun 30, 2023, 10:15 AM IST | Last Updated Jun 30, 2023, 10:15 AM IST

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல்துறையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக குடிபோதையில் இருசக்கர வாகனத்தை தள்ளாடி ஓட்டி வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். குடிபோதை ஆசாமி காவல் துறையினரின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். ரோந்து பணியில் இருந்த நான்கு காவல் துறையினர் குடிபோதை ஆசாமியை மடக்கி பிடித்தனர்.

காவல் துறையினரின் பிடியில் இருந்து மீண்டும் தப்பி ஓட முயன்றதால் காவல் துறையினர் சட்டையை பிடித்து இழுக்க, சார் விடுங்க சார் பப்ளிக் எல்லாம் பார்க்குறாங்க என்று காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த ஆட்டோவை வரவழைத்து குடிபோதை ஆசாமியை அள்ளிப்போட்டு சென்றனர். போக்குவரத்து காவல்துறையினர் குடிபோதை ஆசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பேருந்து நிலையம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

Video Top Stories