திண்டுக்கல்லில் கேப்டன் விஜயகாந்திற்காக மொட்டை அடித்து இறுதிச்சடங்குகள் செய்த தொண்டர்கள்

திண்டுக்கல் மாவட்டம்  கொசவபட்டியில் விஜயகாந்தின் உருவ படத்தை வைத்து பாடை கட்டி இறுதி ஊர்வலம் சென்ற தேமுதிக நிர்வாகிகள்.

First Published Dec 30, 2023, 11:12 AM IST | Last Updated Dec 30, 2023, 11:12 AM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக் குறைவால் சென்னையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இதைபோல் திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டியில்  தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் விஜயகாந்தின் உருவ படத்தை வைத்து பாடை கட்டி, இறுதி ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர். அதற்கு முன்னதாக தேமுதிக நிர்வாகிகள் மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்தினர். இதில்  ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Video Top Stories