வேடசந்தூரில் உடல் உறுப்புகளை தானம் செய்த நபருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்திய ஆட்சியர் பூங்கொடி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவடைந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய நபருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்திய ஆட்சியர் பூங்கொடி.

First Published Jan 30, 2024, 5:48 PM IST | Last Updated Jan 30, 2024, 5:54 PM IST

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் அருகே உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடந்த 25ம் தேதி கானப்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர், அவரது கண்கள், இதயம், சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உடல் உறுப்புகளை தானம் கொடுக்க சம்மதித்ததை அடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அதையடுத்து, புதுப்பாளையத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, செல்வகுமாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் பழனி வருவாய் கோட்டாட்சியர், வேடசந்துார் வட்டாட்சியர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்தினர்.

Video Top Stories