குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்களை பந்தாடிய காட்டு மாடு; அதிர்ச்சியில் பொதுமக்கள்

கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தை காட்டு மாடு ஒன்று முட்டி தூக்கி வீசிய சம்பவம் குடியிருப்பு வாசிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

First Published Dec 13, 2023, 8:18 PM IST | Last Updated Dec 13, 2023, 8:18 PM IST

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கொடைக்கானல் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் யானை, காட்டு மாடு, குரங்கு, காட்டுப்பன்றியால் தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களை தாக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதிகளில் பகல் நேரத்திலேயே காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக வந்து குடியிருப்பு பகுதியில் உள்ள வாகனங்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காட்டுமாடு ஒன்று முட்டி தூக்கி வீசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் யாராவது தெரியாமல் காட்டுமாடிடம் சிக்கிவிட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்று நினைத்து பார்க்கும்போதே அச்சம் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Video Top Stories