சாலையில் மாபெரும் ஓவியம் வரைந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு! - வேளாண் மாணவர்கள் புதுமை!

வத்தலகுண்டு அருகே வேளாண் கல்லூரி மாணவர்கள் சாலையில் ஓவியம் வரைந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 

First Published Mar 6, 2023, 3:20 PM IST | Last Updated Mar 6, 2023, 3:20 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே வேளாண் கல்லூரி மாணவர்கள் சாலையில் ஓவியம் வரைந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

பொள்ளாச்சியில் உள்ள வானவராயர் வேளாண் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் 75 நாட்களாக வத்தலகுண்டு பகுதியில் தங்கியிருந்து சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு சென்று விவசாயிடம் பயிர் சாகுபடி செய்வது பற்றி தெரிந்து கொள்ளவும் மற்றும் விவசாயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக வத்தலகுண்டு அருகே உள்ள பழைய வத்தலகுண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் முன்பாக சாலையில் வத்தலகுண்டு ஊர் வரைபடம், மக்கள் தொகை வரைபடம், விவசாயிகளைப் பற்றிய வரைபடம் உள்ளிட்ட விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். பின்னர் விவசாயிகளை அங்கு அழைத்து ஓவியங்களை காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வும் கூறினர். விளைபொருள்களை விற்பதில் உள்ள சிக்கல்களை கேட்டறிந்து அதற்கு ஓவியம் மூலம் தீர்வு கூறினர். மேலும் விவசாயத்தில் கால்நடைகளின் பங்கீடு பற்றி எடுத்துரைத்தனர். விளைபொருட்கள் விலை குறைவாக வைக்கும் போது எவ்வாறு அரசு கிட்டங்கிகளில் சேமித்து வைத்து விற்க வேண்டும் என்று விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் விவசாயிகள் வேளாண் கல்லூரி மாணவர்களின் ஆலோசனைக்ளுக்கு நன்றி தெரிவித்தனர். வேளாண் கல்லூரி மாணவர்கள் சாலையில் ஓவியம் வரைந்து விவசாயிகளுக்கு விளக்கிய புதிய அணுகுமுறையை விவசாயிகளும் பொதுமக்கள் பாராட்டினர்.

Video Top Stories