Recla Race : வத்தலகுண்டு அருகே நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயம்! சீறிப்பாய்ந்த காளைகள்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
 
First Published May 5, 2023, 1:05 PM IST | Last Updated May 5, 2023, 1:05 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

பெரிய மாடு, நடு மாடு, பூஞ்சிட்டு ஆகிய மூன்று வகை மாடுகளுக்கான போட்டிகள் நடைபெற்றன தென் மாவட்டங்களில் பல்வேறு ஊர்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு ரூபாய் 10 ஆயிரம், முதல் ரூபாய் 25 ஆயிரம் வரை பரிசுகள் வழங்கப்பட்டன. ஜீ.தும்மலப்பட்டி தொடங்கி வத்தலகுண்டு புறவழிச்சாலை வரை நடைபெற்ற போட்டிகளை காண வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மாட்டு வண்டிகள் சீறிப் பாய்வதை கண்டு ரசித்தனர்.

Video Top Stories