VIDEO | வனப்பகுதியில் சுற்றித்திரியும் பச்சை கிளிகளை பிடித்து விற்பனைக்கு வைத்திருந்த தம்பதி கைது!
பழனியில் வனபகுதியில் வாழும் பறவைகள் பச்சை கிளிகள் ,முனியாஸ் பிடித்து வைத்திருந்த கணவன் மனைவிக்கு அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு வசித்து வரும் அறிய வகையிலான பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு புகார் வந்தன. இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் அவ்வப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பழனி ஆவணி மூல வீதியை சேர்ந்த கணவன் மனைவியான மாரிமுத்து, பார்வதி இருவரிடம் இருந்த பச்சை கிளிகள் 40, முனியாஸ் பறவை 70 பிடித்து கூண்டில் அடைத்து வைத்து விற்பனைக்கு வைத்திருந்த்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வனத்துறையினர் மாரிமுத்து மற்றும் அவருடைய மனைவி பார்வதியிடம் இருந்த வன பகுதியில் வாழ் பறவைகளைகள் ,பிடிக்க பயன்படுத்திய கூண்டுகளை பறிமுதல் செய்தும் ,கணவன் மனைவிக்கு 30 ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேலும் பழனி பகுதியில் வீட்டில் கிளிகள் வளர்த்தால் 25 ஆயிரம் அபராதம் விதிக்கபடும் எனவும் பொதுமக்கள் வீட்டில் வைத்துள்ள கிளிகளை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.