VIDEO | 21 நாட்களில் நிறைந்த பழநி கோவில் உண்டியல்! 2 நாட்களாக எண்ணப்பட்டதில் ரூ.4.41கோடி வரவு!

பழநி மலைக்கோயில் உண்டியல்கள் 21 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்களாக கணிக்கைகள் எண்ணும்பணி நடைபெற்றது. இதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரூபாய் 4.14 கோடி கிடைத்துள்ளது.
 

First Published Jun 14, 2023, 1:39 PM IST | Last Updated Jun 14, 2023, 1:39 PM IST

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் தொடர் விடுமுறையை அடுத்து குவிந்த பக்தர்கள் கூட்டம் காரணமாக 21 நாட்களில் நிறைந்தது. இதையடுத்து உண்டியல்கள் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

இருநாள் தொடர்ச்சியாக காணிக்கை எண்ணப்பட்டதில், ரொக்கம் நான்கு கோடியே 14 இலட்சத்து 12 ஆயிரத்து 524 கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 1,330 கிராமும், வெள்ளி 16,832 கிராமும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 465 காணிக்கையாக கிடைத்துள்ளது.



தவிர உண்டியலில் பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்துள்ளன. உண்டியல் எண்ணிக்கையின் போது பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர்(பொறுப்பு) லட்சுமி, மதுரை தங்க நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் பொன்.சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Video Top Stories