இரண்டாவது நாளாக போக்கும் காட்டும் "மக்னா" யானை - பீதியில் பொதுமக்கள்!

பொள்ளாச்சியில் இருந்து வெளியேறிய மக்னா காட்டு யானை தற்போது மதுக்கரை வனச்சரகம் பகுதியில் செந்தமிழ்நகர் பகுதியில் முகாமிட்டுள்ளது.
 

First Published Feb 22, 2023, 1:15 PM IST | Last Updated Feb 22, 2023, 1:15 PM IST

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் பிடிக்கப்பட்ட மக்னா காட்டு யானை கடந்த 5 ஆம் தேதிவனத்துறை பொள்ளாச்சி அருகே வரகளியாறு பகுதியில் விடப்பட்டது. அந்த காட்டு யானை அரிசி பாளையம் ஜமீன் காளியாபுரம் சொக்கனூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியே புகுந்து புறநகர் பகுதியான மதுக்கரை எல்லையை நேற்று எட்டியது.

இதுவரை 140 கிலோ மீட்டர் கடந்து வந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளனர். தற்போது இந்த மக்னா காட்டு யானை மதுக்கரை வனப்பகுதியில் உள்ள செந்தமிழ் நகர் காட்டுப்பகுதியில் முகாம் இட்டுள்ளது. இந்த காட்டு யானையை 200க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கண்காணித்து வருகின்றனர்.

மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அதிகாரிகள் கூறும்போது யானை ஒருவேளை ஊருக்குள் வந்தால் வெளியே வந்து அதனை துன்புறுத்த வேண்டாம் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருந்தால் போதும் என மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.