Watch : தாயை இழந்த யானை குட்டிகள்! பெட்டமுகிலாலம் வனப்பகுதியில் நடமாட்டம்!

தர்மபுரி அருகே தாயை இழந்த குட்டி யானைகள் தொலைந்து போன நிலையில், அவை பெட்டமுகிலாலம் வனப்பகுதியில் சுற்றித்திரிகிறது. வனத்துறையில் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

First Published Apr 1, 2023, 4:17 PM IST | Last Updated Apr 1, 2023, 4:17 PM IST

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் கடந்த மாதம், விவசாயி ஒருவர் தோட்டத்தில் சட்ட விரோதமாக வைத்திருந்த மின்வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் பரிதாமாக உயிரழிந்தன. அப்போது, தாயை பிரிந்த இரண்டு குட்டி யானைகள் தவித்த சம்பவம் பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கியது

இந்நிலையில் வன விலங்கு ஆர்வலர் ஒருவர் யானைகள் உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார், தாயை இழந்து உயிரோடு இருக்கும் இரண்டு யானை குட்டிகளை பத்திரமாக காப்பாற்றிட வனத்துறை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது,

ஆனால், குட்டி யானைகள் தொலைந்து போயிருந்ததால், அவைகள் எங்கே இருக்கிறது என்ன செய்கிறது என்று தெரியாமல், பாலக்கோடு வனத்துறையினர் வனப்பகுதியில் தேடி தேடி களைத்து போயிருந்தனர்,

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குட்டி யானைகள் குறித்த எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்த நிலையில், பெட்டமுகிலாலம், வடக்கு வனப்பகுதியில் இரண்டு குட்டி யானைகள் உயிரோடு இருப்பதும், ஆரோக்கியமாக சுற்றி திரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து குட்டி யானைகளை கண்காணிக்கும் பணிகளில் இரண்டு மாவட்ட வனத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்