பாம்புக்கு நீர் வார்த்த ஆர்வலர்; மயங்கி கிடந்த பாம்புக்கு தண்ணீர் கொடுத்து உயிரூட்டிய இளைஞர்

கடலூர் மாவட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்த பாம்புக்கு தண்ணீர் கொடுத்து பாம்பு இயல்பு நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து அது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விடப்பட்டது.

First Published Jul 5, 2023, 3:45 PM IST | Last Updated Jul 5, 2023, 3:45 PM IST

கடலூர் அருகே உள்ள திருச்சோபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் அலுமினிய வியாபாரம் செய்து வருகிறார். இவர் வீட்டுன் அருகே பாம்பு ஒன்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதைக் கண்ட நடராஜன், பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் கொடுத்துயுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது பாம்பு  மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பாம்பிற்கு தண்ணீர் கொடுத்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தண்ணீர் குடித்த பாம்பு தெளிவடைந்த உடன் பாம்பை பாட்டிலில் பிடித்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் விட்டார்.

Video Top Stories