நாட்டு வெடிகுண்டுடன் மாமியார் வீட்டுக்குள் புகுந்த மருமகன்.. உயிரை பணயம் வைத்து மீட்ட போலீஸ்..! பரபரப்பு வீடியோ..

மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி,  கழுத்தில் நாட்டு வெடிகுண்டுடனுமும்,  உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்ள போன வாலிபரை உயிரை பணயம் வைத்து மீட்ட முதன்மை காவலர்.

First Published Sep 23, 2019, 12:25 PM IST | Last Updated Sep 23, 2019, 12:25 PM IST

கடலூர் மாவட்டம் , நெய்வேலி நகரம், வடட்ம் 25-இல் என்ற பகுதியில் மணிகண்டன் என்பவர் நேற்று முன் தினம் கழுத்தில் நாட்டு வெடிகுண்டை சுற்றிக்கொண்டு, தனது  மாமியார் வீட்டின் முன்பு கையில் பெட்ரோல் கேனுடன்,  தனது மனைவியை தன்னிடம் சேர்த்து வைக்க கோரி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.

 இதனை பார்த்த மணிகண்டனின் மாமியார் தெருவில் வந்து கூச்சலிட்டு உள்ளார். அப்போது  அவ்வழியாக வந்த நெய்வேலி நகர முதன்மை காவலர் பாலச்சந்திரன் கூச்சலிட்ட பெண்ணிடம் விசாரித்து, வீட்டினுள் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார். 

 வீட்டினுள் சக்தி வாய்ந்த வெடிகுண்டையை, தனது கழுத்தில் சுற்றி கொண்டு, உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தீப்பெட்டியை பற்ற வைக்க முயற்சித்துள்ளார் . 

முதன்மை காவலர் பாலச்சந்திரன் உயிரை பணயம் வைத்து, சூசமாக பேசி தற்கொலை செய்து கொள்ளாமல் பல மணி நேரமாக தடுத்து கொண்டிருந்தார். ஆனால் மணிக்கண்டன் விடாப்பிடியாக தற்கொலை செய்து கொள்ள போவதாக, கூறிக் கொண்டு இருந்ததால், பொதுமக்கள் பயத்தில் யாரும் செல்லவில்லை. தனது மனைவியை தன்னிடம் சேர்த்து வைக்குமாறு கூறி கொண்டு இருந்தார்.  இந்நிலையில் விபரீதத்தை உணர்ந்த  காவலர் பாலச்சந்திரன் நெய்வேலி நகரத்திற்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலைமை காவலர் சங்கர் மற்றும் காவலர் ராஜியும் சமாதன பேசி மணிகண்டனை மீட்க முயன்றனர். 

இறுதியில் மணிகண்டனின் இரண்டு வயது குழந்தையை தூக்கி கொண்டு, முதன்மை காவலர் பாலச்சந்திரன் மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளுவோம் என்று துணிச்சலாக மணிக்கண்டனிடம் சென்றதும், அழுதப்படியே தற்கொலை முயற்சியை கைவிட்டு, குழந்தையை தூக்கியதும், அவரது உடலில் இருந்த வெடிக்குண்டுகளை அகற்றிவிட்டு, உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார். 

பின்னர் மணிக்கண்டன் தான் விஷம் அருந்தியதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை மீட்டு நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

உயிரை பணயம் வைத்து மணிகண்டனை காப்பாற்றிய முதன்மை காவலர் பாலச்சந்திரனுக்கு பொது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டு குவிந்து வருகிறது.
 

Video Top Stories