Watch : குட்டி நாய்கள் அருகேபடம் எடுத்த நல்ல பாம்பு ! பரபரப்பு வீடியோ...

கடலூரில் குட்டி நாய்கள் அருகே நல்ல பாம்பு படம் எடுத்தபடியே நின்றதால் பரபரப்பு

First Published Jan 5, 2023, 11:19 PM IST | Last Updated Jan 5, 2023, 11:19 PM IST

கடலூர் அருகே உள்ள சாவடியில்   தெரு நாய் தற்போது நன்கு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்நிலையில் நேற்று தான் ஈன்ற குட்டிகளுக்கு பால் கொடுக்க வந்த தாய்நாய் வந்த போது நல்ல பாம்பு ஒன்று நாய் பால் கொடுக்க விடாமல் படம் எடுத்தது. தாய் பாசத்தில் குரைத்த நாயின் சத்தம் கேட்டு வந்து பார்த்த வீட்டின் உரிமையாளர் பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தார். அவர் வரும் வரையிலும் நல்ல பாம்பு குட்டி நாய்களை தீண்டாமல் இருந்ததை செல்லா வீடியோ எடுத்தார்.

தொடர்ந்து குட்டிகள் முன்பு படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பை லாபகரமாக மீட்டார். குட்டி நாய்களை காத்த நல்ல பாம்பு என இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Video Top Stories