Caught on Camera : பொள்ளாச்சி அடுத்த நவமலை சாலையில் காட்டு யானை கூட்டம் உலா! - வன துறையினர் எச்சரிக்கை!

ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட பகுதியில் தற்போது வறட்சி நிலவி வருவதால், உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தில் உள்ள விலங்குகள் பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருகின்றன.
 
First Published Jun 29, 2023, 9:31 AM IST | Last Updated Jun 29, 2023, 9:31 AM IST

ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட பகுதியில் தற்போது வறட்சி நிலவி வருவதால், உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தில் உள்ள விலங்குகள் பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருகின்றன.

இந்நிலையில் நவமலை செல்லும் பாதையில் குட்டிகளுடன் யானை கூட்டம் உலா வருகிறது. இதனை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனை தொடர்ந்து, வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பெரும்பாலும் மாலை நேரங்களில் மட்டுமே தண்ணீர் உள்ள இடங்களில் சுற்றி வந்த யானை கூட்டம் தற்போது அனைத்து வேலைகளிலும் சாலைகளில் உலா வருகிறது. இதனால் சுற்றுலா வரும் பயணிகள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாதவாறு கடந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
 
Video Top Stories