Watch : சிறுத்தை தாக்கிய இளம்பெண்ணிற்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை இல்லை! - அரசு மருத்துவமையின் அவலம்!
கோவை அரசு மருத்துவமனையில் முறையான மருத்துவ உபகரணம் இல்லை என சிறுத்தையால் தாக்கப்பட்ட நோயாளி குற்றச்சாட்டியுள்ளார்.
கூடலூரை சேர்ந்த 18 வயது சுசீலா என்ற கல்லூரி மாணவி சிறுத்தை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில். கண் புருவம் அருகே அறுவை சிகிச்சை செய்யவேண்டும், அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லை, என்றும் அரசு மருத்துவமனை தெரிவிப்பதால் செய்வதரியாது தவித்து வருகிறார்கள்
செவிலியர்கள் சரியான முறையில் பதில் அளிப்பதில்லை என்றும் ஊசி போடுவதற்கு மறந்து விட்டதாகவும் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். மூன்று நாட்களாக முறையான சிகிச்சை அளிக்காமல் இன்று டிஸ்டார்ஜ் செய்யும் படியும் மருத்துவ நிர்வாகம் சார்பில் கூறியுள்ளதாக நோயாளி உடன் இருப்பவர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து டீன் நிர்மலாவிடம் நாம் பேசும் பொழுது சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுகிறது என்றும் இப்போது வரை அனைத்து சிகிச்சைகளையும் அளிக்கப்பட்டது என்றும் டிஸ்சார்ஜ் போன்றவை நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்றும் முற்றிலுமாக இது தவறான கருத்து என்றும் டீன்நிர்மலா மறுப்பு தெரிவித்துள்ளார்.