Watch : கோவை கல்லூரி விழாவில் பங்கேற்ற சின்னத்திரை புகழ் ''அறந்தாங்கி நிஷா'' - மாணவர்கள் ஆரவாராம்!

கோவை நேரு நகர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சின்னத்திரை புகழ் அறந்தாங்கி நிஷா கலந்துகொண்டார். கல்லூரி மாணவ,மாணவிகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
 

First Published Apr 5, 2023, 2:53 PM IST | Last Updated Apr 5, 2023, 2:53 PM IST

கோவை காளப்பட்டி சாலை நேரு நகர் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2023 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் மேலாண் இயக்குனர் லஷ்மிநாராயணசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் முதல்வர் கோவிந்தராஜுலு , டீன் ரம்யா சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல சின்னத்திரை புகழ் அறந்தாங்கி நிஷா கலந்து கொண்டு கல்லூரி மாணவ,மாணவிகளிடையே நகைச்சுவையாக உரையாடினார். தொடர்ந்து மாநில, மாவட்ட, மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற விளையாட்டு, அறிவு திறன் கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவில் கௌரவ அழைப்பாளர்களாக பிரபல யோகா சாதனையாளர் வைஷ்ணவி, பிரபல பாடகர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Video Top Stories