Asianet News TamilAsianet News Tamil

பொள்ளாச்சி உச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழா; 60 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் வழிபாடு

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினத்தில் உச்சி மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் 60 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

First Published Mar 1, 2024, 1:34 PM IST | Last Updated Mar 1, 2024, 1:34 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உச்சி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 13ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை 6.30 மணிக்கு துவங்கியது. 

60 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில்  போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த குண்டம் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Video Top Stories