Viral Video : கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

கோவையில் மாருதி செலக்சன் துணிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
 

First Published Sep 23, 2022, 12:46 PM IST | Last Updated Sep 23, 2022, 12:46 PM IST

கோவை சித்தாபுதூர் பகுதியில் நேற்று இரவு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. அப்போது கட்சி பிரமுகர்கள் சிலர் தரைத்தளத்திற்கு முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த பாட்டிலை தூக்கி, கட்சி அலுவலகத்தை நோக்கி வீசிவிட்டு வேகமாக தப்பிச் சென்றனர். பாஜக அலுவலகத்திற்கு அருகே உள்ள மின்கம்பம் மீது விழுந்தது இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை, இதனால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. இதே போல கோவை ஒப்பணக்கார தெருவில் உள்ள துணிக் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Video Top Stories