Watch : அவசரகதியில் உதயநிதியை அமைச்சராக்கியது ஏன் என மக்கள் கேள்வி! - டிடிவி தினகரன் கருத்து!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று அக்கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கோவில்களில் சிறப்பு பூஜைகளையும் மேற்கொண்டனர்.
 
Share this Video

அதன் தொடர்ச்சியாக கோவை ராமநாதபுரத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சிக் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசி அவர், வரும் தேர்தலில் யாரை முதல்வராக வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

இப்போது, ஏன் ஆட்சியை திமுகவிற்கு கொடுத்தோம் என்ற வருத்தத்தில் தமிழ்நாட்டு மக்கள் உள்ளனர் என்றார். அவச அவசரவதியில் உதயநிதியை ஒன்றரை ஆண்டுகளில் அமைச்சர் ஆக்கியது ஏனென்று தமிழ்நாட்டு மக்கள் கேட்கதாகவும் சுட்டிக்காட்டினா்.

மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என்றும், எடப்பாடி பழனிச்சாமி செய்த தவறுகளை உண்ர்ந்துள்ளார் என்றும்,
ஓ.பி.எஸ் ஐ சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.

Related Video