வெள்ள நிவாரண பணிகளை மக்கள் பாராட்டி உள்ளனர் - சபாநாயகர் அப்பாவு பெருமிதம்

வெள்ள நிவாரண பணிகளை குறைகூறுவது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் பணியை கொச்சை படுத்துவதற்கு சமம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

First Published Dec 13, 2023, 10:21 PM IST | Last Updated Dec 13, 2023, 10:21 PM IST

கோவை விமான நிலையத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர்  கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகின்றது. கோவையில் இன்று பள்ளி,கல்லூரி என இரு இடங்களில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. 

தமிழக அரசு மேற்கொண்ட வெள்ள நிவராண பணிகளை பொது மக்கள் பாராட்டி இருக்கின்றனர். மத்திய குழு நேற்று வந்து தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி இருக்கின்றது என பாராட்டி இருக்கின்றது. இதில் குறைகூறுவது பல ஆயிரம் தொழிலாளர்களின் பணியை கொச்சைபடுத்துவதை போன்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு  உதவிகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Video Top Stories