சர்வதேச யோக போட்டியில் தங்கம் பதக்கம்… மாணவ மாணவிகளுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

துபாயில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டியில்  தங்க பதக்கங்களை வென்று கோவை திரும்பிய  மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

First Published May 14, 2023, 10:32 PM IST | Last Updated May 14, 2023, 10:32 PM IST

துபாயில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டியில்  தங்க பதக்கங்களை வென்று கோவை திரும்பிய  மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட வீரங்கனைகளுக்கு  சர்வதேச அளவிலான யோகா சேம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்றது. கடந்த 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா, துபாய்,அபுதாபி ஷார்ஜா, அமெரிக்கா, மெக்சிகோ,கனடா,மஸ்கட்,சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர். சப் ஜூனியர்,ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில்  மயூர் ஆசனம், திருவிக்கிரம் ஆசனம், சிரசாசனம்,பூரண ஸலபாசனம்,என பல்வேறு ஆசனங்கள் கொண்டு யோகா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்களான  கனித்ரா,தேவகர்ஷன்,திவித் மற்றும் கல்லூரி மாணவர் கௌதம் உள்ளிட்ட நான்கு பேரும் தங்கப்பதக்கங்களை வென்று முதல் பரிசை பெற்று சாதனை படைத்தனர். யோகா போட்டியில் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் மாணவ மாணவிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.