Asianet News TamilAsianet News Tamil

Watch : மேட்டுப்பாளையத்தில் ''மாமனிதன் வைகோ'' ஆவணப்படம் வெளியீடு! - செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு?

மேட்டுப்பாளையத்தில் மாமனிதன் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் குண்டர்கள் அவமதிப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

First Published Nov 21, 2022, 11:39 AM IST | Last Updated Nov 21, 2022, 11:39 AM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மாமனிதன் வைகோ குறும்பட வெளியீட்டு விழாவானது தனியார் திரையரங்கில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா முன்னிலையில் திரையிடப்பட்டது. இதில் மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை.வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களையும் அழைத்திருந்தனர். இந்நிலையில் படம் வெளியிட்ட சற்றுநேரத்தில் செய்தியாளர்கள் தங்களது பணியை துவக்கினர். அப்போது, மதுபோதையில் வந்த நிர்வாகிகளில் சிலர் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இவ்வளவு நடந்த போதும் அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா உள்ளிட்டோர் அமைதியாக இருந்தது செய்தியாளர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஒருகட்டத்தில் செய்தியாளர்கள் இச்செய்தியை சேகரிக்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.