Watch : கோவை பேரூரில் மாமன்னன் இராச ராச சோழன் 1037வது சதயவிழா!

இராசராச சோழனின் 1037வது சதய விழாவை தமிழ்நாட்டில் பல இடங்களில் கொண்டாடுகிறார்கள் இதனை முன்னிட்டு பேரூர் திருவாடுதுறை ஆதீன கிளை மடத்தில் இராசராச சோழனின் செப்பு திருமேனிக்கு பால், தயிர், திருமஞ்சனம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

First Published Nov 4, 2022, 2:47 PM IST | Last Updated Nov 4, 2022, 2:47 PM IST

இராசராச சோழனின் 1037வது சதய விழாவை தமிழ்நாட்டில் பல இடங்களில் கொண்டாடுகிறார்கள் இதனை முன்னிட்டு பேரூர் திருவாடுதுறை ஆதீன கிளை மடத்தில் இராசராச சோழனின் செப்பு திருமேனிக்கு பால், தயிர், திருமஞ்சனம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் பாடப்பட்டது அதனைத் தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இராச ராச சோழனின் பெருமைகளை பறைசாற்றும் சான்றாக இன்று கம்பீரமாக இருக்கின்ற தஞ்சை பெருவுடையார் கோயில் திகழ்கிறது என்பதனை விளக்கும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி முனைவர் மணிமேகலை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி அமைத்துறை தலைவர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக விழா ஏற்பாட்டினை சதய விழா பனிக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.