Watch: கோவையில் கொட்டப்பட்ட கேரள கோழிக் கழிவுகள்!- உள்ளூர்வாசிகள் செயலால் கழிவுகளை அள்ளி சென்ற மர்ம நபரகள்!

கோயம்புத்தூர் வாளையாறு எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்களை, உள்ளூர் கிராமத்து இளைஞர்கள் தட்டிக் கேட்டு, மீண்டும் எடுக்க வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

First Published Apr 24, 2023, 2:08 PM IST | Last Updated Apr 24, 2023, 2:08 PM IST

சமீப காலமாக கேரளாவில் இருந்து எடுத்து வரும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இது குறித்து எழுந்த புகார் அடிப்படையில் காவல் துறையினரும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து மினி ஆட்டோ ஒன்றில் கோழி கழிவுகளை ஏற்றி வந்த மர்ம நபர்கள், வாளையாறு எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டியுள்ளனர். இதனை கண்ட உள்ளூர் இளைஞர்கள், இது குறித்து கேட்ட போது, மர்ம நபர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.



தொடர்ந்து, ஊர் மக்களையும் அழைத்து வந்த இளைஞர்கள், சட்ட நடவடிக்கை எடுக்கபதாக கூறி எச்சரித்ததையடுத்து, அந்த நபர்கள் மீண்டும் கோழி கழிவுகளை மீண்டும் அள்ளி ஆட்டோவில் எடுத்துச் சென்றனர்.

இதனிடையே உள்ளூர் மக்கள் கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் ஆட்டோவில் கோழி கழிவுகள் எடுத்து வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video Top Stories