விசாரணை என்ற பெயரில் அப்பாவிகளை தொந்தரவு செய்ய கூடாது : கோவையில் எஸ்டிபிஐ தலைவர் பேட்டி

கோவையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் அக்கட்சியினர் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர்.
 

First Published Nov 24, 2022, 5:03 PM IST | Last Updated Nov 24, 2022, 5:03 PM IST

கோவையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் அக்கட்சியினர் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநகர கமிஷனரை சந்தித்து கோவையில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதி இல்லை. சமீபத்தில் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் துரதிஷ்டவசமானது. இதனை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சமூக நல்லிணக்கத்திற்கு மங்களூர் சம்பவம் ஒரு அச்சுறுத்தல். இந்த விவகாரத்தில் மத , மொழி பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் அவசியமில்லை. விளம்பரமேனியா நோயால் அண்ணாமலை பாதிக்கப்பட்டுள்ளார். கவர்னர் ஒரு இணை அரசாங்கம் நடத்த நினைக்கிறார். தமிழ்நாட்டுக்கு கவர்னர் நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.

மக்கள் ஆதரவு பெற முடியாதவர்கள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மூலம் தமிழகத்தில் நுழைய நினைக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வட மாநிலங்களில் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளன. என்ஐஏ என்ற பெயரில் சிறுபான்மையினரை குற்றப்பரம்பரையாக்க பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்

Video Top Stories