Watch : மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கோவையில் தொழில் அமைப்புகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் தொழில் அமைப்புகள் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். கோவையில் உள்ள 18 தொழில அமைப்புகள் ஒன்றிணைந்து மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் தற்போது தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வால் அதிருப்தி அடைந்துள்ளனர். பீக் ஹவர்ஸ் கட்டணத்தை குறைத்த தமிழக அரசு அதை முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பெடரேஷன் ஆப் கோயம்புத்தூர் இன்டஸ்ட்ரியல் அசோசியேஷன்(Focia) என்ற பெயரில் 18 தொழிலமைப்புகள் ஒன்றிணைந்து பீக் ஹவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், அதே போல சிறுகுறு தொழில்களை பாதுகாக்க 112 கிலோ வாட் வரை முன்பிருந்த நிலை கட்டணம் ரூபாய் 35 தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.