Snake rescued | கோவையில், சூவுக்குள் ஒளிந்து கொண்ட பாம்பு மீட்பு! - மக்கள் பீதி!

கோவை வெள்ளலூர் பகுதியில் 8 ம் வகுப்பு மாணவனில் சூவுக்குள் ஒளிந்து இருந்த நாக பாம்பு மீட்கப்பட்டது.
 

First Published Nov 10, 2023, 2:29 PM IST | Last Updated Nov 10, 2023, 2:29 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசிக்கும் பிரதீப் என்ற எட்டாம் வகுப்பு மாணவன் வழக்கம் போல் வீட்டிற்கு சென்று இருக்கின்றார். அப்போது வீட்டில் காலணி ஸ்டாண்ட் அருகே சென்ற பொழுது, சீரும் சத்தம் கேட்டுள்ளது. சூவுக்கு உள்ளே பாம்பு இருந்ததை பார்த்த சிறுவன் பிரதீப் தந்தையிடம் தெரிவித்துள்ளார். அவரது தந்தை பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். வீட்டிற்கு விரைந்து வந்த வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரரான மோகன் பாம்பை லாபகரமாக பிடித்து டப்பாவுக்குள் அடைத்தார். அதன் பின் பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.
 

Video Top Stories