Asianet News TamilAsianet News Tamil

நான் வெற்றி பெற்றால்... வீட்டு வரி, தண்ணீர் வரி எதுவும் வாங்க மாட்டேன்! - மிரட்டும் மிலிட்டரி வேட்பாளர்!

நான் வெற்றி பெற்றால் சொத்து வரி, குடிநீர் வரி, என அனைத்து வரிகளில் இருந்தும் என் தொகுதி மக்களுக்கு விலக்கு அளிப்பேன் என முன்னார் ராணுவ வீரர் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தார். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் மதுரை விநாயகம். இவர் 20 வருடங்களாக இந்திய ராணுவத்தில் ஜாயின் கமிஷன் அதிகாரியாக பணிபுரிந்து 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இவர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரான சர்மிளாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்த அவர் ராணுவ உடையிலேயே வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது நாள் வரை இந்திய நாட்டு எல்லையை பாதுகாத்து வந்ததாகவும் தற்பொழுது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென இந்த தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார். மேலும் சம்பாதிப்பதற்காக வரவில்லை எனத் தெரிவித்தார். தற்பொழுது உள்ளவர்களை மூன்று முறை எம்பி ஆக்கினாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்கினாலும் ஓய்வூதியத்தையும் சம்பளத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள் எனவும் மக்களின் வரிப்பணம் முழுவதும் அவர்களிடம் சென்று விடுவதாக தெரிவித்தார். மேலும் நான் வெற்றி பெற்றால் எனது தொகுதி மக்களுக்கு வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி, உள்ளிட்டவற்றை வசூலிக்க மாட்டேன் எனத் தெரிவித்தார். மேலும் எனது பொள்ளாச்சி தொகுதியில் தென்னை விவசாயிகளின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வேன் எனவும் நீர்நிலைத் திட்டங்களை சரி செய்வேன் எனவும் தெரிவித்தார்.

Video Top Stories