கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு திடீரென துப்பாக்கிகளுடன் வந்த நபர்களால் பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக கலர் கலர் துப்பாக்கிகளுடன் வந்த ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

First Published Feb 12, 2024, 7:05 PM IST | Last Updated Feb 12, 2024, 7:05 PM IST

ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவராக இருப்பவர் லோட்டஸ் மணிகண்டன். இக்கட்சியினர் மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கலர் கலர் போலி துப்பாக்கியை கைகளில் ஏந்திய படி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது மணிகண்டன் கூறுகையில், தான் இந்துஸ்தான் மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனத் தலைவராக இருந்து வருகின்றேன். கடந்த 20 ஆண்டுகளாக இந்துத்துவா பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாக புகார் அளிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். 

இதனால் எனக்கு மதரீதியாகவும், அதேபோல பல்வேறு சமூக பிரச்சினைகளை கையில் எடுப்பதால் அவர்கள் மூலமாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. எனவே தனக்கும், தனது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது. எனவே தற்காத்துக் கொள்வதற்காக துப்பாக்கி வைத்துக் கொள்வதற்காக அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வந்துள்ளதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை மனு அளிப்பதற்கு அனுமதி அளித்தனர்.